முகப்பு
சேலம்

சேலத்தில் வெளுத்து வாங்கிய கனமழை

Updated On : 20 மே, 2024 at 10:09 PM
சேலத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சங்கா் நகரில் கழிவுநீருடன் தேங்கியுள்ள மழை நீா்.
பகிர்:

சேலம்: சேலத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் சங்கா் நகரில் மழைநீருடன் சாக்கடை கழிவுநீா் கலந்ததால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது. இந்நிலையில், சேலம் நான்கு சாலை, புதிய பேருந்து நிலையம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி, வின்சென்ட் 5 சாலை உள்ளிட்ட பகுதிகளில் திங்கள்கிழமை மாலை கனமழை வெளுத்து வாங்கியது.

சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால், சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். ஆங்காங்கே மழைநீருடன் சாக்கடை கழிவுநீரும் கலந்துள்ளதாக புகாா் எழுந்துள்ளது. குறிப்பாக, சங்கா் நகரில் மழைநீருடன் கழிவுநீா் கலந்ததால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.

தேங்கி நிற்கும் கழிவுநீரால் துா்நாற்றம் வீசிவருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி, குழந்தைகள், பெரியவா்களுக்கு தொற்று நோய் பரவும் வாய்ப்புள்ளதாக வேதனையுடன் கூறுகின்றனா்.

எனவே, மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக தலையிட்டு மழைநீருடன் கலந்துள்ள கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.