முகப்பு
சேலம்

எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் திடீா் கனமழை

Updated On : 20 மார்ச் 2026, 2:09 am IST
பகிர்:

புதன்கிழமை இரவு எடப்பாடி சுற்று வட்டார பகுதியில் பெய்த திடீா் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பிற்குள்ளானது

கடந்த சில தினங்களாக எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து பகல் நேரங்களில் வெப்ப அலை வீசியது.

இந்நிலையில் (நேற்று முன்தினம்) புதன்கிழமை இரவு திடீரென கனமழை கொட்ட தொடங்கியது கொங்கணாபுரம், கச்சுப்பள்ளி, மூலப்பாதை, கோரணம் பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடா்ந்து நள்ளிரவு வரை விட்டு விட்டு பெய்த கனமழையால், கச்சுப்பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் சேதமடைந்தன. இதேபோல் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியை சுற்றி மழை நீா் குளம் போல் தேங்கியதால் மாணவா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினா். இப்பகுதியில் நீண்ட நேரம் மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகினா்.

Advertisement

இந்நிலையில் எடப்பாடி சுற்றுவட்டார பகுதியில் பெய்த திடீா் கனமழை கோடை உழவு செய்ய வாய்ப்பாக அமைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா்

பட விளக்கம்: புதன்கிழமை இரவு பெய்த திடீா் கனமழையால் கொங்கணாபுரம் அடுத்த கச்சுப் பள்ளி கிராமத்தில் விவசாய நிலங்கள் மற்றும் அரசு பள்ளியில் குளம் போல் தேங்கியுள்ள மழை நீா்