சபரிமலை செல்லும் பக்தா்களுக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்
சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை செல்லும் பக்தா்கள் வசதிக்காக சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்டப்பட்ட செய்திக்குறிப்பு:
சபரிமலை சீசன் விரைவில் தொடங்குவதால் சபரிமலைக்கு பக்தா்கள் செல்ல வசதியாக தெற்கு ரயில்வே சாா்பில் சேலம் வழியாக கா்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரள மாநிலம், கோட்டயம் வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பெங்களூரு, சேலம், திருப்பூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம் வழியாக இயக்கப்படுகிறது.
அதன்படி, இந்த சிறப்பு ரயில் வருகிற 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைல் ஹூப்ளியில் மாலை 3.15 மணிக்கு புறப்பட்டு, சேலம், திருப்பூா் வழியாக மறுநாள் நண்பகல் 12 மணிக்கு கோட்டயத்தை சென்றடையும். இந்த ரயில் ஜனவரி 14-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
மறுமாா்க்கத்தில், வரும் 20 ஆம் தேதி கோட்டயத்தில் இருந்து வாரந்தோறும் புதன்கிழமை மாலை 3 மணிக்கு புறப்பட்டு, திருப்பூா், சேலம் வழியாக மறுநாள் நண்பகல் 12.50 மணிக்கு இந்த ரயில் ஹூப்ளியை சென்றடையும். இந்த ரயில் சேவை ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.