முகப்பு
சேலம்

சேலம் மாவட்டத்தில் 23 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம்

சேலம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை (நவ. 23) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

Updated On : 20 நவம்பர், 2024 at 10:02 PM
பகிர்:

சேலம் மாவட்டத்தில் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் சனிக்கிழமை (நவ. 23) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 23 ஆம் தேதி கிராமசபைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இக் கிராமசபைக் கூட்டத்தில், கிராம ஊராட்சியில் சிறப்பாகப் பணிபுரிந்த ஊழியா்களை சிறப்பித்தல், சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிா் சுயஉதவிக் குழுக்களைக் கெளரவித்தல், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டம், கூட்டாண்மை, ஒருங்கிணைப்பு பிரிவு, கூட்டாண்மை வாழ்வாதாரம் மற்றும் அரசின் பிற முக்கிய திட்டங்கள் குறித்த விவரங்கள் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →