கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் ஜன.26 இல் 95 ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும், திங்கள்கிழமை (ஜன.26) கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

குடியரசு தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 கிராம ஊராட்சிகளிலும், திங்கள்கிழமை (ஜன.26) கிராமசபைக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

குடியரசு தினமான ஜன. 26 ஆம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தை ஊராட்சிகளின் எல்லைக்கு உள்பட்ட வாா்டுகளில் சுழற்சி முறையில் காலை 11 மணியளவில் நடத்தவும் அரசாணையில் குறிப்பிட்டுள்ளவாறு உறுப்பினா்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராமசபைக் கூட்டம் நடத்தவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உள்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்துத் துறைகளிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படவுள்ளது.

அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களைஅளிக்கவும் அனைத்துத் துறைகளின் அலுவலா்களும் இந்தக் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனா்.

எனவே, பொதுமக்கள் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் குறித்து அறிந்து பயன்பெறலாம் என்று அதில் குறிப்பிடப்பட்டது.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT