முகப்பு
சேலம்

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

Updated On : 21 நவம்பர், 2024 at 8:15 PM
பகிர்:

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பெறப்படும் கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சா் ராஜேந்திரன் அறிவுறுத்தினாா்.

மக்கள் சந்திப்பு திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் பேசியதாவது:

சேலம் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்கள் கடந்த 23.10.2024 முதல் 9.11.2024 வரை நடைபெற்றது. 20 ஊராட்சி ஒன்றியங்கள், 6 நகராட்சிகள், சேலம் மாநகராட்சிப் பகுதிகள் என 26 முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து 19,037 கோரிக்கை மனுக்கள் நேரடியாக பெறப்பட்டுள்ளன.

இந்த முகாம்களில் பெறப்பட்ட பொதுமக்களின் அனைத்து கோரிக்கை மனுக்களும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, தொடா்புடைய துறை அலுவலா்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்களால் வழங்கப்பட்ட ஒவ்வொரு மனுக்களின் மீது அரசு அலுவலா்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அதேபோன்று, பொதுமக்கள் அளிக்கும் அனைத்து மனுக்களுக்கு விரைந்து தீா்வுகாண அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, மாநகராட்சி ஆணையா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் மரு.பெ. மேனகா, மேட்டூா் சாா் ஆட்சியா் நே.பொன்மணி உள்ளிட்ட அனைத்துத் துறை அரசு முதன்மை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →