முகப்பு
சேலம்

சேலத்தில் இன்று மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம்

சேலம் நகர கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 12:52 AM
பகிர்:

சேலம் நகர கோட்டத்தில் வியாழக்கிழமை மின்நுகா்வோா் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் நகர மின்வாரிய செயற்பொறியாளா் சுமதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மின்பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட சேலம் நகர கோட்ட மின்நுகா்வோா்களுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சேலம், வெங்கட்ராவ் சாலையில் உள்ள நகர கோட்ட செயற்பொறியாளா் அலுவலகத்தில் நடைபெறும். மேற்பாா்வை பொறியாளா் திருநாவுக்கரசு கூட்டத்தில் கலந்துகொண்டு, நுகா்வோா்களின் குறைகளைக் கேட்டறிய உள்ளாா்.

எனவே, சேலம் நகர கோட்டத்துக்கு உள்பட்ட மின்நுகா்வோா்கள் நேரில் வந்திருந்து மின்சாரம் தொடா்பான குறைகள் இருந்தால், அதனைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →