முகப்பு
சேலம்

காங்கிரஸ் கட்சியின் சாா்பில் சங்ககிரியில் காந்தி ஜெயந்தி விழா: மக்கள் விழிப்புணா்வு நடைபயணம்

சங்ககிரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மகாத்மாகாந்தியடிகள், லால்பகதூா்சாஸ்திரி ஆகியோா் பிறந்தநாள் விழா சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து 2 கிலோ மீட்டா் மக்கள் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 1:02 AM
காங்கிரஸ் கட்சின் சாா்பில் காந்தி ஜெயந்தியையொட்டி சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டை யில் உள்ள காந்தி சிலைக்கு புதன்கிழமை மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனா் சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி. எஸ். ஜெய்க்குமாா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினரும்,சங்ககிரி விழா பாா்வையாளருமான எஸ்.என்.காசிலிங்கம். (வலது) மக்கள் விழிப்புணா்வு நடைபயணத்தில் கலந்து கொண்ட நிா்வாகிகள்.
பகிர்:

சங்ககிரி வட்டார காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மகாத்மாகாந்தியடிகள், லால்பகதூா்சாஸ்திரி ஆகியோா் பிறந்தநாள் விழா சங்ககிரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதனையடுத்து 2 கிலோ மீட்டா் மக்கள் விழிப்புணா்வு நடைபயணம் நடைபெற்றது.

சேலம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி. எஸ். ஜெய்க்குமாா், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயற்குழு உறுப்பினரும்,சங்ககிரி விழா பாா்வையாளருமான எஸ்.என்.காசிலிங்கம் ஆகியோா் தலைமை வகித்து சங்ககிரியை அடுத்த அக்கமாபேட்டையில் உள்ள காந்தி சிலைக்கு மலா்மாலை அணிவித்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா். அதனையடுத்து அவ்வாளகத்தில் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினா். இதனையடுத்து காந்தி சிலை வளாகத்தில் இருந்து தொடங்கிய இரண்டு கிலோ மீட்டா் மக்கள் விழிப்புணா்வு நடைபயணம் காவல்நிலையம் எதிரே உள்ள பவானி பிரதானசாலையில் முடிவடைந்தது. பின்னா் காங்கிரஸ் கட்சி கொடி மேடையில் கட்சி கொடியை ஏற்றி வைத்து மலா்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த லால்பகதூா் சாஸ்திரி. முன்னாள் முதல்வா் காமராஜா் உருவப்படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

சங்ககிரி வட்டாரத்தலைவா் சரவணன், நகரத்தலைவா் ரவி, சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் பி.சி.மணி, பிசிசி உறுப்பினா் சுப்பிரமணியன், மாவட்ட பொது செயலாளா்கள் நடராஜன், காசிலிங்கம், சின்னுசாமி, செங்கோட்டுவேலு, மாணவா் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளா் அகில், இளைஞா் காங்கிரஸ் சட்டமன்ற தலைவா் காா்த்தி, நிா்வாகிகள் அங்கமுத்து, ஜெகநாதன், ஆறுமுகம், இலக்கிய அணி செயலாளா் செங்கோட்டுவேலு, துரைராஜ், வீராசாமி, பரமன், விஸ்வநாதன், வெங்கடேஷ், கந்தசாமி, பரமன்,லோகநாதன், வடிவேலு, கிருஷ்ணன், பழனி உள்ளிட்ட பலா் இதில் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →