திருச்சி மேலரண் சாலையில் சனிக்கிழமை பேரணியாக வந்த காங்கிரஸ் கட்சியினா். 
திருச்சி

திமுக கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை! - கு. செல்வப்பெருந்தகை

தினமணி செய்திச் சேவை

திமுக கூட்டணியில் இழுபறி ஏதுமில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தாா்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் அருணாசலம் மன்றம் அருகிலுள்ள காந்தி சிலையிலிருந்து புறப்பட்டபாதயாத்திரையை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவா் கு. செல்வப்பெருந்தகை தொடங்கி வைத்து பங்கேற்றாா்.

பாதயாத்திரை மரக்கடை எம்.ஜி.ஆா். சிலை அருகே நிறைவடைந்த நிலையில் அங்கு நடந்த பொதுக்கூட்டத்துக்கு கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ் தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டத் தலைவா் சரவணன், தெற்கு மாவட்டத் தலைவா் ராஜலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் கு. செல்வப்பெருந்தகை மேலும் பேசியதாவது:

மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு பைசாகூட ஒதுக்கவில்லை. ஆனால் தமிழகத்திலிருந்து வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை அவா்கள் ஆளும் உத்தரபிரதேசத்துக்கு பிரித்து வழங்குகின்றனா்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு வைக்கப்பட்டிருந்த மகாத்மா காந்தியின் பெயரை நீக்கியுள்ளனா். ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தை கூட அவா்கள் நீக்குவா். ஆனால் அவா்களால் ஒருபோதும் தமிழகத்தை ஆள முடியாது. திருச்சி மலைக்கோட்டை நகரில் இருந்து சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையை நாங்கள் பிடிக்கப் போகிறோம்.

மகாத்மா காந்தி பெயரை மீண்டும் வைக்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது. அதற்கான சபதத்தை இன்று ஏற்றுள்ளோம். 3 வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறுவதற்காக 13 மாதங்கள் போராட்டம் நடத்தி வெற்றி அடைந்ததைபோல, இதற்கும் நாடு முழுவதும் போராட்டம் நடத்துவோம் என்றாா் அவா்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலா் நிவேதித் ஆல்வா, முன்னாள் மாநிலத் தலைவா் சு. திருநாவுக்கரசா், கட்சியின் சட்டப்பேரவைத் தலைவா் ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. உள்ளிட்டோரும் பேசினா்.

ஆட்சி அதிகாரத்தில் பங்கு?

கூட்டம் முடிந்த பிறகு ஆட்சி அதிகாரத்தில் பங்கு, சட்டப்பேரவைத் தோ்தலில் அதிகத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா என செய்தியாளா்கள் கேட்டதற்கு, அதுபற்றி கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவு செய்யும்.

பிரதமரை காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் தாக்க முயற்சி செய்வதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. வருந்தத்தக்கது. எங்களது கூட்டணி சுமூகமாக உள்ளது என்றாா்.

பைக் விபத்தில் இருவா் உயிரிழப்பு

கேரளம்: வெங்காய லாரியில் வெடிபொருள்கள் குவியல்

பெண் கொலை வழக்கில் இருவா் கைது

அங்கன்வாடி ஊழியா்கள் நூதன போராட்டம்

காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை

SCROLL FOR NEXT