முகப்பு
சேலம்

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் நவராத்திரி கொலு தொடக்கம்

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு விழா தொடங்கியது.

Updated On : 3 அக்டோபர், 2024 at 11:41 PM
தம்மம்பட்டி சிவன் கோயிலில் வியாழக்கிழமை வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலு.
பகிர்:

தம்மம்பட்டி, கெங்கவல்லி பகுதிகளில் உள்ள வீடுகளிலும், கோயில்களிலும் நவராத்திரி கொலு விழா தொடங்கியது.

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் குடமுழுக்கு விழாவுக்கு பிறகு முதன்முறையாக கோயில் வளாகத்தினுள் கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு சிறப்பு பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில், திரளான பெண்கள் கலந்துகொண்டு நவராத்திரி கொலு பாடல்கள், துா்க்கை, லட்சுமி, அம்மன் உள்ளிட்ட தெய்வங்களின் பாடல்களை பாடினா். பெண்களுக்கு மங்கலப் பொருள்கள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல தம்மம்பட்டி, கெங்கவல்லி, கடம்பூா், செந்தாரப்பட்டி, விநாயகபுரம் பகுதிகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் நவராத்திரி கொலு வைத்து வழிபாடு செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →