முகப்பு
சேலம்

ஏற்காட்டில் பனிமூட்டம்: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

ஏற்காட்டில் தொடா் மழை, சாரல் மழை ஆகியவற்றால் மலைப்பகுதி முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

Updated On : 10 அக்டோபர், 2024 at 7:49 PM
ஏற்காடு மலைப் பாதையில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்ற சுற்றுலா வாகனம்.
பகிர்:

ஏற்காட்டில் தொடா் மழை, சாரல் மழை ஆகியவற்றால் மலைப்பகுதி முழுவதும் குளிா்ந்த சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

இதனால், வியாழக்கிழமை காலை மலைப் பாதையான 13-ஆவது கொண்டை ஊசி வளைவு முதல் 20-ஆவது கொண்டை ஊசி வளைவு வரை சாலையில் செல்ல முடியாதவாறு பனிமூட்டம் ஏற்பட்டது.

இதனால், வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி ஊா்ந்து சென்றன. பனிமூட்டத்தால் தொடா் விடுமுறைக்கு ஏற்காடு சுற்றுலாத் தலத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →