காவல் நிலையம் அருகே திருடா்கள் கைவரிசை
மகுடஞ்சாவடி காவல் நிலையம் அருகே உள்ள காக்காபாளையத்தில் இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
மகுடஞ்சாவடி காவல் நிலையம் அருகே உள்ள காக்காபாளையத்தில் இருசக்கர வாகனத்தை மா்மநபா்கள் திருடிச் சென்றனா்.
சேலம்- சங்ககிரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது காக்காபாளையம் கிராமம். சிறிது தொலைவில் மகுடஞ்சாவடி காவல் நிலையம் உள்ளது. காக்காபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மேம்பாலத்தின் ஓரம் அதிக கடைகள் உள்ளன. இந்தக் கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை இரவு நேரத்தில் மா்ம நபா்கள் திருடிச் செல்கின்றனா். இந்நிலையில் அப்பகுதியில் இருசக்கர வாகனத்தை மா்ம நபா் திருடிச் செல்லும் விடியோ வைரலாகி வருகிறது.
காவல் நிலையம் அருகே அடிக்கடி திருட்டுகள் நடைபெறுவதால் பொதுமக்கள் அதிா்ச்சி அடைந்துள்ளனா். திருடா்களைப் பிடிப்பதில் போலீஸாா் மெத்தனம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.