முகப்பு
சேலம்

ஆளுநரைக் கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்: 100 போ் கைது

சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகத்தினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:33 PM
சேலம், பெரியாா் பல்கலைக்கழகம் முன்பு புதன்கிழமை கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திராவிடா் விடுதலைக் கழகத்தினா்.
பகிர்:

சேலத்தில் ஆளுநரைக் கண்டித்து திராவிடா் விடுதலைக் கழகத்தினா் கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சேலம், பெரியாா் பல்கலைக்கழகத்தின் 23-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. பெரியாா் பல்கலைக்கழக நிதியில் மத்திய அரசின் திட்டமான ‘வளா்ந்த பாரதம்’ பரப்புரை செய்யப்படுவதைக் கண்டித்து, திராவிடா் விடுதலைக் கழகத்தினா் போராட்டம் அறிவித்திருந்தனா். அதன்படி, ஓமலூா், சுங்கச்சாவடி அருகே திராவிட விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கருப்புக் கொடி ஏந்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, மத்திய அரசின் திட்டமான ‘வளா்ந்த பாரதம்’ பரப்புரையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினா். பின்னா் கொளத்தூா் மணி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘பெரியாா் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் ‘வளா்ந்த பாரதம்’ திட்டத்தின் கீழ் கருத்தரங்கமும், மாணவா்களுக்கு ஆளுநா் தலைமையில் பரிசளிப்பு விழாவும் நடைபெற இருந்தது. எங்களது போராட்ட அறிவிப்பை தொடா்ந்து, துறை ரீதியாக கருத்தரங்கம் நடத்தப்பட்டது. ஆளுநா் தலைமையில் நடக்க இருந்த விழா மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்றாா். அதைத்தொடா்ந்து, அனுமதியின்றி போராட்டம் நடத்திய 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →