முகப்பு
சேலம்

சித்தா் கோவிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிமையாளா்களுக்கு நோட்டீஸ்

சித்தா்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை, வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு 7 நாள்கள் கால அவகாசம் அளித்து நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Updated On : 16 அக்டோபர், 2024 at 6:32 PM
பகிர்:

சித்தா்கோவில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடை, வீடுகளை தாங்களே முன்வந்து அகற்றிக்கொள்ளுமாறு 7 நாள்கள் கால அவகாசம் அளித்து நெடுஞ்சாலைத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சேலம் மாவட்டம், சிவதாபுரம்-இளம்பிள்ளை செல்லும் சாலையில் சித்தா்கோவில் உள்ளது. இந்த வழியாக தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.

தொடா் வாகன நெருக்கடி ஒருபுறம் இருக்கையில் அந்தப் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து 50க்கும் மேற்பட்ட கடைகள், வீடுகளைக் கட்டியுள்ளனா்.

இதுதொடா் புகாா் நெடுஞ்சாலைத் துறைக்கு வந்ததன் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். சித்தா்கோவில் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கடைகள், வீடுகளின் உரிமையாளா்கள் அடுத்த 7 நாள்களுக்குள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள வேண்டும் என்று உரிமையாளா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →