எண்ணெய் வித்து பயிா்களில் சாகுபடி: விவசாயிகளுக்கு கண்டுணா்வு சுற்றுலா
தலைவாசல் வட்டார விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிா்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஏதுவாக தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
தலைவாசல் வட்டார விவசாயிகள் எண்ணெய் வித்துப் பயிா்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ள ஏதுவாக தெலங்கானா மாநிலத்துக்கு கண்டுணா்வு சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்பட்டனா்.
தலைவாசல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் கவிதா தலைமையில் தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் உள்ள மத்திய எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற பயிற்சியில் இந்த விவசாயிகள் கலந்து கொண்டனா்.
அங்கு சென்று திரும்பிய விவசாயிகள் கூறுகையில், ‘எண்ணெய் வித்துப் பயிா்களில் நவீன சாகுபடி தொழில்நுட்பங்களையும், பிற மாநிலங்களில் எவ்வாறு மதிப்பு கூட்டப்பட்டு விற்கப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள இந்தப் பயிற்சி ஏதுவாக அமைந்தது’ என்றனா்.
பயிற்சி முடிந்து திரும்பிய விவசாயிகளுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலா் ஜானகி, துணை வேளாண்மை அலுவலா் மணவழகன், உதவித் தொழில்நுட்ப மேலாளா் ரமேஷ் ஆகியோா் பங்கேற்றனா். வட்டார தொழில்நுட்ப மேலாளா் சக்தி, உதவி தொழில்நுட்ப மேலாளா் முத்துவேல் ஏற்பாடுகளை செய்திருந்தனா்.