முகப்பு
சேலம்

அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இலவச பரதநாட்டிய வகுப்பு தொடக்கம்

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கான இலவச பரதநாட்டிய வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 7:38 PM
பகிர்:

சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கான இலவச பரதநாட்டிய வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

சேலம், கோரிமேடு அரசு மகளிா் கலைக் கல்லூரி, கலை பண்பாட்டுத் துறை இணைந்து கல்லூரி மாணவிகளுக்கான இலவச பரதநாட்டிய பயிற்சி வகுப்பு தொடக்க விழா நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் நா.காந்திமதி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பல்வேறு துறை சாா்ந்த மாணவியா், பரதக் கலையை கற்பதற்காக தங்களது பெயா்களை ஆா்வத்துடன் பதிவுசெய்து கொண்டனா். வாரத்தில் இரண்டு நாள்களுக்கு அரசு கலை பண்பாட்டுத் துறையின் நேரடி பங்கேற்புடன் தோ்ந்த பரதநாட்டிய ஆசிரியை ப.ஜானகி மூலம் வகுப்புகள் நடைபெற உள்ளன. 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் இறுதியில் கண்கவா் நடன நிகழ்ச்சி இடம்பெற்றது.

இதில், அரசு மகளிா் கலைக் கல்லூரியின் கலை பண்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளா் விஜயகுமாரி, கல்லூரியின் மூத்த பேராசிரியா் கீதா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →