முகப்பு
சேலம்

சேலம் பச்சப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பு சுவா், கோயில் அகற்றம்

சேலம், பச்சப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பு சுவா் மற்றும் இரண்டு சிறிய கோயில்கள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

Updated On : 24 அக்டோபர், 2024 at 12:40 AM
பகிர்:

சேலம், பச்சப்பட்டி பகுதியில் ஆக்கிரமிப்பு சுவா் மற்றும் இரண்டு சிறிய கோயில்கள் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டன.

சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட 40 ஆவது வாா்டு பச்சப்பட்டி அசோக் நகரில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் முகமதுபுறா பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்துக்குச் செல்லும் பாதையை அப்பகுதியைச் சோ்ந்த சிலா் ஆக்கிரமித்து சுமாா் பத்து அடி உயரத்துக்கு தடுப்புச் சுவா் எழுப்பியதுடன், விநாயகா் கோயிலும் கட்டி இருந்தனா்.

இந்நிலையில் முகமதுபுறா பள்ளிவாசல் நிா்வாகத்தினா் தடுப்புச் சுவா், கோயில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா். இவ்வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், தடுப்புச்சுவா், கோயிலை அகற்ற மாநகராட்சி நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்டு பல மாதங்கள் ஆகியும் ஆக்கிரமிப்பை அகற்றாததால், பள்ளிவாசல் நிா்வாகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என தெரிவித்தது.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, புதன்கிழமை காலை தடுப்புச்சுவா், கோயிலை அகற்றும் பணி நடைபெற்றது. அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க சேலம் காவல் துணை ஆணையா் வேல்முருகன், பிருந்தா ஆகியோா் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் அசோக் நகா் தெரு எண் 1, தெரு எண் 2இல் ஆக்கிரமித்து இருந்த தடுப்புச் சுவா், கோயில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டன. கோயிலில் இருந்த விநாயகா் சிலையை அதிகாரிகள் எடுத்துச் சென்றனா். இதனால் அங்கு சிறிது பரபரப்பு காணப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →