முகப்பு
சேலம்

இளம் சாதனையாளா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 7:41 PM
பகிர்:

இளம் சாதனையாளா்களுக்கான கல்வி உதவித்தொகை பெற மாணவ, மாணவிகள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வரும் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபினா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில், பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளது.

2024-25-ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தைச் சாா்ந்த மாணவா்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்கான பெற்றோரது ஆண்டு வருமான வரம்பு ரூ. 2.50 லட்சமாகும். இதற்கு மாணவா்கள் விண்ணப்பிக்க வரும் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபாா்க்க அடுத்த மாதம் 15-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இத்திட்டத்தின் கீழ், நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9, பிளஸ் 1 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் முறையே 8, 10-ஆம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களில் அடிப்படையிலேயே பயனாளிகளாக தோ்வு செய்யப்பட்டு, இக்கல்வி உதவித்தொகையானது வழங்கப்படும்.

மேலும், இத்திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்கள் அறிந்திட மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை அணுகி கல்வி உதவித்தொகை பயன்களைப் பெறுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →