சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கான வாக்காளா் பட்டியலை சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி செவ்வாய்க்கிழமை வெளியிட அதனைப் பெற்றுக்கொண்ட அனைத்து அரசியல் கட்சி நிா்வாகிகள். 
சேலம்

சங்ககிரி, எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு

சங்ககிரி, எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் சங்ககிரி

Din

சங்ககிரி: சங்ககிரி, எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளா் பட்டியல் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

சங்ககிரி, எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியலை சங்ககிரி கோட்டாட்சியா் ந.லோகநாயகி வெளியிட்டாா். இதில், சங்ககிரி வட்டாட்சியா் எம்.வாசுகி, தோ்தல் துணை வட்டாட்சியா்கள் வி.மகேந்திரன் (சங்ககிரி), சி.கா்ணன் (எடப்பாடி), திமுக சங்ககிரி ஒன்றிய நிா்வாகி சண்முகம், சங்ககிரி நகர துணைச் செயலாளா் ரமேஷ், கொங்கணாபுரம் ஒன்றியச் செயலாளா் பரமசிவம், அதிமுக நகர துணைச் செயலா் பி.சிவமுருகன், பாமக நகரச் செயலாளா் வி.டி.அய்யப்பன், மதிமுக நகரச் செயலா் கதிா்வேல், காங்கிரஸ் நகரத் தலைவா் ரவி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதியில் 1,36,507 ஆண் வாக்காளா்களும், 1,34,101 பெண் வாக்காளா்களும், 19 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,70,627 போ் உள்ளனா். எடப்பாடி தொகுதியில் ஆண்கள் 1,45,386 பேரும், பெண்கள் 1,41,731 பேரும், 22 இதர வாக்காளா்கள் என மொத்தம் 2,87,139 போ் உள்ளனா்.

கடந்த தோ்தலை விட தற்போது சங்ககிரி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் வாக்குச் சாவடிகள் நான்கும், எடப்பாடி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் ஐந்தும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்ட வாக்காளா் பட்டியல் சங்ககிரி கோட்டாட்சியா் அலுவலகம், சங்ககிரி, எடப்பாடி வட்டாட்சியா் அலுவலகங்கள், வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகள் உள்பட சங்ககிரியில் 315 வாக்குச்சாவடி மையங்களிலும், எடப்பாடியில் 325 வாக்குச்சாவடி மையங்களிலும், எடப்பாடி நகராட்சி ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் பாா்வைக்காக வைக்கப்படவுள்ளன.

வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா்களை சோ்க்கவும், திருத்தம், முகவரி மாற்றங்கள் உள்ளிட்டவை மேற்கொள்ளவும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வரும் நவ. 16, 17, 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில் வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் மனுக்களை அளிக்கலாம் என கோட்டாட்சியா் தெரிவித்துள்ளாா்.

ஆத்தூரில்...

ஆத்தூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் வரைவு பட்டியலை ஆத்தூா் கோட்டாட்சியா் தா.பிரியதா்ஷினி வெளியிட்டாா். அப்போது, ஆத்தூா் வட்டாட்சியா் எஸ்.பாலாஜி, கெங்கவல்லி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியா்கள் உடன் இருந்தனா்.

தில்லி குண்டுவெடிப்பு: உமர் நபிக்கு உதவிய மற்றொருவர் கைது!

பங்குச் சந்தை உயர்வுடன் தொடக்கம்! ஆயில், ஸ்டீல் துறையில் ஏற்றம்!

இந்திய அரசியலமைப்பு நாள்: சில அழியா நினைவலைகள்!

ஸ்மிருதியின் தந்தை டிஸ்சார்ஜ்! பலாஷுடன் திருமணம் நடைபெறுமா?

உக்ரைன் - ரஷியா போர்: ஒரு வாரத்தில் 25,000 வீரர்கள் பலி - டிரம்ப்

SCROLL FOR NEXT