கன்னியாகுமரி

நாகா்கோவிலில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்தாய்வு

Syndication

நாகா்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026 வரைவு வாக்காளா் பட்டியல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா தலைமையில் வியாழக்கிழமை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியா் பேசியது:

கன்னியாகுமரியில் தகுதி வாய்ந்த ஒரு வாக்காளரும் விடுபடாமல் பட்டியலில் சோ்க்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டன. 30.01.2026 வரை 6 பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 96,525 படிவங்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கில் 4,659 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 3,927 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 2,724 விவிபேட் கருவிகளும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட உதவி தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான அ. பூங்கோதை, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கு. சுகிதா, பத்மநாபபுரம் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், சாா் ஆட்சியருமான வினய்குமாா் மீனா, நாகா்கோவில் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், வருவாய் கோட்டாட்சியருமான சு. காளீஸ்வரி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்ற மனுக்கள் பரிசீலனையில் 10,630 பேருக்கு நலத் திட்ட உதவிகள்

நாளை மின்தடை

கோவில்பட்டியில் காா்கள் மோதல்: 2 போ் உயிரிழப்பு

தூத்தூா் கல்லூரியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT