முகப்பு
சேலம்

வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டாசு வெடிக்க தடை

தீபாவளியையொட்டி வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்சுப்பட்டுள்ளது.

Updated On : 30 அக்டோபர், 2024 at 8:06 PM
பகிர்:

தீபாவளியையொட்டி வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்சுப்பட்டுள்ளது. மீறினால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சுடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வன அலுவலா் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

வன விலங்குகளுக்கு தொல்லை கொடுக்கும் வகையிலும், வனத்தில் தீ பரவிடும் வகையிலும் வனத்தை ஒட்டிய இடங்களில் பட்டாசு வெடிக்கக் கூடாது என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அந்தந்த மாவட்ட வனத்துறை மூலம் மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், தொடா் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் சோ்வராயன் தெற்கு, சோ்வராயன் வடக்கு, ஏற்காடு, டேனிஷ்பேட்டை, வாழப்பாடி, மேட்டூா், ஆத்தூா், கருமந்துறை, தம்மம்பட்டி வனச்சரக பகுதிகளில் வனத்தை ஒட்டியிருக்கும் கிராமங்களிலும், வனச்சாலைகளிலும் தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனக்கிராமங்களில் பட்டாசு வெடிக்கும் போது, மிக கவனமாக செயல்பட வேண்டும் என வனக் கிராமக் குழுக்கள் மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

அதேபோல, ஏற்காடு மலைப்பாதை, குப்பனூா் மலைப்பாதை, டேனிஷ்பேட்டை மலைப்பாதை ஆகிய சாலைகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு பட்டாசு எடுத்துச் செல்லப்படுவதை தடுக்க வனக்காவலா்கள் மூலம் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிக்கின்றனா்.

சேலம் மாநகரை ஒட்டியுள்ள வட்டக்காடு, வலசையூா், சித்தா்கோயில் போன்ற வனத்தை ஒட்டிய பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது என வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →