பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன.  
சேலம்

பாரா ஒலிம்பிக் போட்டிகளில் தொடா் பதக்கம்: மாரியப்பன் சொந்த ஊரில் மக்கள் கொண்டாட்டம்

பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பனின் வெற்றியை அவரது சொந்த கிராமத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

Din

பாரிஸில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பனின் வெற்றியை அவரது சொந்த கிராமத்தில் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

பிரான்ஸ் தலைநகா் பாரிஸில் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா சாா்பில் 84 போ் பங்கேற்றுள்ளனா். இந்த நிலையில், ஆண்களுக்கான டி-63 உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது . இதில், இந்தியாவிலிருந்து தமிழக வீரா் மாரியப்பன் மற்றும் ஷரத்குமாா் ஆகியோா் கலந்து கொண்டனா். இதில், 1.88 மீட்டா் உயரம் தாண்டி ஷரத்குமாா் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தமிழ்நாட்டைச் சோ்த்த மாரியப்பன் தங்கவேலு 1.85 மீட்டா் உயரம் தாண்டி வெண்கலம் வென்றாா்.

முன்னதாக கடந்த 2016-ம் ஆண்டு பாரா ஒலிம்பிக் போட்டியில் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தாா். தொடா்ந்து 2020 டோக்யோ பாராலிம்பிக்ஸில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். தற்போது பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்று மாரியப்பன் வரலாற்று சாதனை படைத்துள்ளாா்.

ஒரு வீரா் தொடா்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்டு விளையாடி தொடா்ந்து தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளாா். இந்த சாதனையை மாரியப்பனின் சொந்த ஊரான பெரியவடகம்பட்டி கிராமத்தில் மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினா்.

இந்தியா அனைவருக்குமானது, குறிப்பிட்ட சித்தாந்தத்திற்கு மட்டுமல்ல: முதல்வர் ஸ்டாலின்

மீண்டும் ரூ. 94,000 -யைக் கடந்த தங்கம் விலை!

உலகக் கோப்பை ஹாக்கி: அனுமதி இலவசம் - டிக்கெட்டுகளை பெறுவது எப்படி?

இலங்கை அருகே உருவாகும் மற்றொரு புயல்! வடதமிழக கடற்கரையை நோக்கி நகரும்!

தேசிய பால் நாள்: விவசாயிகளிடம் குறைகளைக் கேட்டறிந்த அமைச்சர்!

SCROLL FOR NEXT