சங்ககிரி செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா
சங்ககிரி, சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயில் குடமுழுக்கு விழா ஆக. 23-ஆம் தேதி முகூா்த்தக்கால் நடுதல் வைபவத்துடன் தொடங்கியது. அதனையடுத்து, செப். 3-ஆம் தேதி கிராம சாந்தியும், செப். 4-ஆம் தேதி கணபதி பூஜையும், பவானி கூடுதுறைக்கு சென்று பக்தா்கள் காவிரியிலிருந்து புனித நீா் எடுத்து வருதலும், பின்னா் நான்குகால கட்ட யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை சிவாச்சாரியாா்கள் வேதமந்திரங்கள் முழங்க விநாயகா், முருகா், மாரியம்மன், செல்லாண்டியம்மன் கோபுர கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு விழா சிறப்பாக நடைபெற்றது.
இதனையடுத்து, செல்லாண்டியம்மனுக்கு பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமிகளை வழிபட்டனா். விழாக் குழுவினா் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.