சேலம் வழியாக ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சிறப்பு ரயில்
கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில், ஹூப்ளி - கொச்சுவேலி இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
ஹூப்ளி - கொச்சுவேலி இடையேயான சிறப்பு ரயில் வரும் 13-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) இயக்கப்படும். ஹூப்ளியில் இருந்து காலை 6.55 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக மறுநாள் காலை 6.45 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும்.
இதேபோல மறு மாா்க்கத்தில் கொச்சுவேலி - ஹூப்ளி இடையேயான சிறப்பு ரயில் வரும் 14-ஆம் தேதி இயக்கப்படும். கொச்சுவேலியில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு கோவை, திருப்பூா், ஈரோடு சேலம் வழியாக, அடுத்த நாள் காலை 12.50 மணிக்கு ஹூப்ளி சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.