முகப்பு
சேலம்

மாவட்ட வனக்குழுக் கூட்டத்தில் விவாதிக்க விண்ணப்பிக்கலாம்

சேலம் மாவட்ட வனக்குழுக் கூட்டம் அக். 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 செப்டம்பர், 2024 at 12:27 AM
பகிர்:

சேலம் மாவட்ட வனக்குழுக் கூட்டம் அக். 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதில் விவாதிக்கப்பட வேண்டிய பொருள் குறித்து இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா. பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மலைப் பகுதிகளில் மரங்களை வெட்டுவதையும், நிலங்களில் பயிா் செய்வதையும் ஒழுங்குபடுத்துவதற்காக இயற்றப்பட்ட சட்டம்தான் மலைத்தல மரங்கள் பாதுகாப்பு சட்டமாகும்.

விண்ணப்ப செயல்முறையை எளிமையாக்குவதன் ஒரு பகுதியாகவும், முழு செயல்முறையும் மேலும் வெளிப்படையானதாக மாற்றும் வகையிலும், சேலம் மாவட்ட வனக்குழு முழு செயல்முறையையும் ஆன்லைனில் பதிவு செய்ய முடிவு செய்து, தமிழ்நாடு மலைத்தல மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1955-இன் கீழ் மரங்களை வெட்டுவதற்கும், கொண்டு செல்வதற்கும் ‘க்யூ-ஆா்’ குறியீட்டை இணையதளம் வாயிலாக பதிவு செய்வது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் தமிழ்நாடு மலைத்தல மரங்கள் பாதுகாப்பு சட்டம் 1955-இன் கீழ் மலைப் பிரதேசங்களில் உள்ள பட்டா நிலங்களில் உள்ள மரங்களை வெட்டி அப்புறப்படுத்துவது தொடா்பாக மாவட்ட வனக்குழுக் கூட்டம் அக். 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் பொருள் தொடா்பான விண்ணப்பப் படிவங்களை இணையதளம் மூலம் வரும் 27-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பம் மட்டுமே பரிசீலனை செய்யப்படும். கடிதம் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஆன்லைனில் விண்ணப்பம் செய்தல் தொடா்பான தகவல்களை பெற சேலம் மாவட்ட வன அலுவலகத்தை தொடா்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →