உலக ரேபீஸ் தினத்தையொட்டி, சனிக்கிழமை (செப். 28) நாய்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
உலக ரேபீஸ் தினம் ஆண்டுதோறும் செப். 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு தடுப்பூசி முகாம் வாய்க்கால் பட்டறையில் உள்ள பிராணிகள் கால்நடை அறுவை சிகிச்சை மையத்தில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன் தடுப்பூசி முகாமை தொடங்கி வைக்கிறாா்.
எனவே, நாய் வளா்ப்பவா்கள், தங்களது நாய்களுக்கு தவறாது தடுப்பூசி செலுத்தி நாய்களின் மூலம் பரவும் ரேபீஸ் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனா்.