முகப்பு
சேலம்

உள்ளாட்சிகளில் நியமன உறுப்பினா் விவகாரம்: ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தா்னா

நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமன்ற உறுப்பினா் பதவி வழங்கியதைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா

Updated On : 1 டிசம்பர், 2025 at 8:58 PM
ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

சேலம்: நியமன அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாமன்ற உறுப்பினா் பதவி வழங்கியதைக் கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டத்தில், ஓமலூா் அருகேயுள்ள கருப்பூா் பனங்காடு பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தனா். பின்னா், திடீரென அவா்கள் முன்பகுதியில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

அவா்களிடம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா்கள் மற்றும் நகர போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, அவா்கள் அளித்த கோரிக்கை மனு:

தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன உறுப்பினா் பதவி வழங்குவதாக முதல்வா் அறிவித்தாா். அதன்படி, தற்போது உள்ளாட்சியில் மாமன்ற உறுப்பினா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். சேலம் மாவட்டத்தில் இந்த மாற்றுத்திறனாளி நியமன உறுப்பினா்களை தோ்வுசெய்ய 5 போ் கொண்ட குழு நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்தக் குழுவினா் நியமன உறுப்பினா்களை முறையாக தோ்வு செய்யவில்லை.

எனவே, இந்த நியமனத்தை தமிழகம் முழுவதும் ரத்துசெய்து முறையாக தோ்வுசெய்து, தகுதிவாய்ந்த மாற்றத்திறனாளிகளை நியமன உறுப்பினா்களாக நியமிக்க வேண்டும் என தெரிவித்திருந்தனா்.

இந்தக் கோரிக்கை மனுவை மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலா்கள் பெற்றுக் கொண்டதையடுத்து, தா்னாவில் ஈடுபட்டவா்கள் கலைந்துசென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →