சேலம்: சேலம் கிழக்கு கோட்டத்தில் வரும் 23-ஆம் தேதி அஞ்சல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கிழக்கு கோட்ட அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளா் முனிகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கான அஞ்சல் ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் வரும் 23-ஆம் தேதி சேலம் தலைமை அஞ்சல் நிலையத்தில் உள்ள முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இந்த வாய்ப்பை ஓய்வூதியா்கள் பயன்படுத்திக்கொண்டு, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்துகொள்ளலாம். இதற்காக குறைகள் அடங்கிய கடிதத்தை அருகில் உள்ள அஞ்சலகங்கள் மூலம் வரும் 10-ஆம் தேதிக்குள் முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா், கிழக்கு அஞ்சல் கோட்டம், சேலம் - 636 001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.