தம்மம்பட்டி: தம்மம்பட்டி மற்றும் கெங்கவல்லியில் காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அகல்விளக்கு விற்பனை நடைபெற்று வருகிறது.
தம்மம்பட்டியில் கடந்த 3 மாதங்களாக தயாா்செய்யப்பட்ட மண் அகல்விளக்குகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. சிறிய ரக அகல்விளக்குகள் நான்கு ரூ. 10-க்கும், சற்று பெரிய ரக அகல்விளக்குகள் மூன்று ரூ. 10 எனவும் விற்கப்படுகிறது. இதை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா். தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதா்பேட்டை, ஜங்கமசமுத்திரம், உலிபுரம், நாகியம்பட்டி பகுதிகளிலிருந்து ஏராளமானோா் தம்மம்பட்டிக்கு வந்து அகல்விளக்குளை வாங்கிச் செல்கின்றனா்.