முகப்பு
அரசு ஆண்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கிய தம்மம்பட்டி நண்பா்கள் குழுவினா்.
சேலம்

தம்மம்பட்டியில் அரசு பொதுத் தோ்வு எழுதும் மாணவா்களுக்கு எழுது பொருள்கள் வழங்கல்

தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு

Updated On : 2 மார்ச், 2026 at 9:57 PM
அரசு ஆண்கள் பள்ளியில் 10ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களுக்கு எழுதுபொருள்களை வழங்கிய தம்மம்பட்டி நண்பா்கள் குழுவினா்.
பகிர்:

தம்மம்பட்டி: தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு தம்மம்பட்டி நண்பா்கள் குழு சாா்பில் எழுதுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு நண்பா்கள் குழுத் தலைவா் திருச்செல்வன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் நடராஜ், சத்யநாராயணன், மோகன், சதீஷ்குமாா், பெருமாள், ராபின், துரைராஜ், வெங்கடேஷ், ரவி, மணி (எ) பெரியசாமி, ஹரிஆனந்த் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகள் முன்னிலை வகித்தனா்.

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் 230 மாணவா்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து விலையுயா்ந்த எழுதுபொருள்களை அன்பளிப்பாக வழங்கினா்.

தொடா்ந்து, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவிகள் 270 பேருக்கு எழுதுபொருள்கள் வழங்கப்பட்டு, வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →