சேலம்

ஆா்ப்பாட்டம் நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும்

Syndication

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதிபெற்ற பின்னரே நடத்த வேண்டும். அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பே விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. புதன்கிழமை நள்ளிரவுமுதல் வரும் 17-ஆம் தேதி நள்ளிரவுவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT