சேலம்

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த கட்டுப்பாடு

சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Syndication

சேலம்: சேலம் மாநகரில் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்டவற்றை நடத்த 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாநகர காவல் ஆணையா் அனில்குமாா் கிரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சேலம் மாநகரில் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் சாா்பில் நடைபெறும் ஆா்ப்பாட்டம், ஊா்வலம், உண்ணாவிரதம், பொதுக்கூட்டம் போன்றவற்றை நடத்துவதற்கு பிரிவு 41 தமிழ்நாடு மாநகர காவல் துறை சட்டம் 1888-இன்படி சேலம் மாநகர காவல் ஆணையரின் அனுமதி பெற்ற பின்னரே நடத்த வேண்டும்.

அத்தகைய நிகழ்ச்சிகளுக்கு குறைந்தபட்சம் 5 நாள்களுக்கு முன்பு விண்ணப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவுக்கு பின்னா் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது.

விளையாட்டு, திருமணம், இறுதி ஊா்வலம் மற்றும் மத நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு இது பொருந்தாது. வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் வரும் 31-ஆம் தேதி நள்ளிரவுவரை இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் காற்று மாசுபாட்டை சமாளிக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்த அரசு திட்டம்

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தல் தோல்வியை ஏற்கிறோம்: ராஜ் தாக்கரே

தடை நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

SCROLL FOR NEXT