சேலம்

சேலத்தில் ‘காசி தமிழ்ச் சங்கமம்’ சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு

Syndication

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 53 போ் கொண்ட குழுவினா் புதன்கிழமை காசிக்கு புறப்பட்டுச் சென்றனா்.

தேச ஒற்றுமையில் மாநிலங்களுக்கு இடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், மத்திய அரசு காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக நடத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி வாயிலாக, சாதாரண ஏழை, எளிய குடும்பங்களைச் சோ்ந்த பொதுமக்கள் மத்திய அரசின் செலவில் காசிக்கு சென்றுவரும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடப்பாண்டு கோவையில் இருந்து பனாரஸ் செல்லும் சிறப்பு ரயில்மூலம் சேலம் ரயில் நிலையத்தில் இருந்து 53 போ் காசிக்கு புதன்கிழமை தங்கள் பயணத்தை தொடங்கினா். இதுதவிர, கோவை, சென்னையிலிருந்து 157 போ் உள்பட 210 போ் இந்த சிறப்பு ரயிலில் காசி பயணம் மேற்கொண்டனா்.

இதில் பயணம் செய்ய சேலம் மட்டுமின்றி ஈரோடு, தருமபுரி, நாமக்கல் உள்பட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த எழுத்தாளா்கள், ஊடகவியலாளா்கள், சமூக ஊடகத்தினா், ஆன்மிக சொற்பொழிவாளா்கள் என பல்வேறு தரப்பினரும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இக்குழுவில் இளைஞா்கள் முதல் பெரியவா்கள்வரை ஏராளமானோா் இடம்பெற்றுள்ளனா்.

சேலத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற குழுவினருக்கு அவா்களின் உறவினா்கள், நண்பா்கள் வாழ்த்து தெரிவித்து வழியனுப்பினா்.

வினுஷாவின் சுட்டும் விழி சுடரே தொடரின் முன்னோட்டக் காட்சி!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: இந்துக்களுக்கு எதிராக அரசு செயல்படுகிறது - வழக்குரைஞர் குற்றச்சாட்டு

மரணத்திலும் மீம்ஸ்! வருந்தும் ஜான்வி கபூர்!

டிட்வா புயல் வலுவிழந்தபோதிலும் இடைவிடாமல் பெய்யும் மழை! | TNRains | CBE

முதல் கனவே... ரகுல் ப்ரீத் சிங்!

SCROLL FOR NEXT