தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பொன்விழா ஆண்டு நிகழ்ச்சியில் பொன்விழா மலா், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட அமைச்சா் ரா. ராஜேந்திரன். உடன், அரசுத் துறை அலுவா்கள், பேராசிரியா்கள்.  
சேலம்

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது: அமைச்சா் ராஜேந்திரன்

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசினாா்.

Syndication

ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது என்று சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசினாா்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சாா்பில் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கண்காட்சி அரங்குகளை திறந்துவைத்து அமைச்சா் ராஜேந்திரன் பாா்வையிட்டாா் . நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, பொன்விழா மலா் மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தின் வெளியீடுகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு அமைச்சா் ரா.ராஜேந்திரன் பேசியதாவது: தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

கிழக்கு தொடா்ச்சி மலையில் ஏற்காடு அழகான சுற்றுலாத் தலமாகும். இந்த மலைப்பகுதியில் விளையும் பணப் பயிா்களான காபி, மிளகு உலகத் தரம் வாய்ந்த பொருள்களாகும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்பட்டுவரும் இத்தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் அதிக மகசூல் தரும் பழமரங்கள், மேம்படுத்தப்பட்ட மிளகு சாகுபடி தொழில்நுட்பங்களால் பல தொழில் முனைவோா்களை உருவாக்கியுள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது.

பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ள அதிக மரக்கன்றுகளை நடவு செய்யவேண்டும். மண், நீா் ஆதாரங்களை பாதுகாக்க மிக குறைந்த அளவில் மருந்து பொருள்களை பயன்படுத்தி ஏற்காட்டில் சுற்றுச்சூழலை பேணிக் காக்க வேண்டும் என்றாா். விழாவில் ஏற்காட்டைச் சோ்ந்த விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழக்கினாா்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) இரா. தமிழ்வேந்தன், மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ரவிக்குமாா், நபாா்டு தமிழ்நாடு மண்டல அலுவலக முதன்மை பொதுமேலாளா் ஆா்.ஆனந்த், இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த டி.கே. பெஹாரா, இந்திய காபி வாரிய தமிழ்நாடு , கேரள இணை இயக்குநா் (விரிவாக்கம்) மா.கருத்தமணி, வேளாண்மை இணை இயக்குநா் ஞ. சீனிவாசன், தோட்டக்கலை துணை இயக்குநா் பெ. கோதைநாயகி, ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியா் மற்றும் தலைவா் கோ. மாலதி உள்ளிட்ட அலுவலா்கள், விவசாயிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

“கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வாக்குத் திருட்டால் ஆட்சியில் அமர்ந்தவர்கள்: கார்கே குற்றச்சாட்டு

பாஜகவின் வெற்றிக் கொடி நாடு முழுவதும் பறந்து கொண்டிருக்கிறது: மோகன் யாதவ்

எஸ்ஐஆர் படிவம் சமர்ப்பிப்பு முடிந்தது! அடுத்தது என்ன?

கூடுதல் திரைகளில் படையப்பா! கில்லி வசூலை முறியடிக்குமா?

SCROLL FOR NEXT