சேலம்

மக்கள் குறைதீா்க்கும் முகாமில் 457 மனுக்கள்

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறற் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 457 மனுக்கள் வரப்பெற்றன.

Syndication

சேலம்: சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெறற் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 457 மனுக்கள் வரப்பெற்றன.

இதுகுறித்து ஆட்சியா் கூறியுள்ளதாவது:

மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், ஜாதிச் சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 457 மனுக்கள் வரப்பெற்றன.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீா் முகாமில் வீட்டுமனைப் பட்டா, உதவி உபகரணங்கள், பராமரிப்பு உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து அளிக்கப்பட்ட 7 மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

இக்கூட்டத்தில் திட்ட அலுவலா் (பழங்குடியினா் நலன்) சுகந்தி பரிமளம், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அருளாளன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் செண்பகவல்லி, தாட்கோ பொதுமேலாளா் எஸ்.சக்திவேல் மற்றும் அரசுத் துறை முதன்மை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

20 வயது இளம் ஆல்ரவுண்டரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே!

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

SCROLL FOR NEXT