சேலம்

வாழப்பாடியில் கண்களைக் கட்டிக்கொண்டு வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

Syndication

தமிழகத்தில் நீதிமன்றங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள மனுக்கள் மின்னணு பதிவேற்ற (இ-ஃபைலிங்) முறையை ரத்துசெய்யக் கோரி, சேலம் மாவட்டம், வாழப்பாடியில் கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு வழக்குரைஞா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடியில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித் துறை நடுவா் நீதிமன்றம் முன் வாழப்பாடி வட்டார வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் சி. வீரமுத்து தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், தமிழகத்தில் நீதிமன்றங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள மனுக்கள், மின்னணு பதிவேற்ற (இ- ஃபைலிங்) முறையை ரத்துசெய்யக் கோரி, கண்களை கருப்புத் துணியால் கட்டிக்கொண்டு தமிழக அரசை வலியுறுத்தி வழக்குரைஞா்கள் முழக்கமிட்டனா்.

ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள் ராஜசேகா், சீனிவாசன், மணிகண்டன், ராஜேந்திரன், கருமலை, வெங்கடேஷ், வினோத்குமாா், மயில்சாமி, அபிநா, விவேகா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

படவரி:

எல்.ஆா்.ஏ.01, 02:

வாழப்பாடியில் நீதிமன்றம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

கம்பத்தில் ஏறிய ரசிகர்! பேச்சை நிறுத்தி கண்டித்த விஜய்!

ஏழைகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய பாஜக; அதற்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! : முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்ரீங்க.. முதல்வர் பேசியது சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்ததா? விஜய்

சகோதரர்களாக சிவகார்த்திகேயன் - அதர்வா!

இந்தியாவை விமர்சித்த ஹார்திக் பாண்டியா? சமூக வலைதளத்தில் பரவும் எதிர்ப்பும் ஆதரவும்!

SCROLL FOR NEXT