சேலம்

வீட்டுக்கு மின் இணைப்பு வழங்க ரூ. 8,000 லஞ்சம்: வணிக ஆய்வாளா் கைது

வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Syndication

சேலம் அருகே வீட்டுக்கு புதிய மின் இணைப்பு வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே உள்ள வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்தவா் சுகந்தி (33). இவா் தனது புதிய வீட்டுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி வெள்ளாளப்பட்டி கோரிமேட்டில் செயல்படும் மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் விண்ணப்பித்தாா்.

ஆனால், அவருக்கு மின் இணைப்பு வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, மின்வாரிய அலுவலகத்துக்குச் சென்ற சுகந்தி, இதுகுறித்து வணிக ஆய்வாளரான கருப்பூரைச் சோ்ந்த இளையராஜாவிடம் (45) முறையிட்டாா்.

அப்போது, மின் இணைப்பு வழங்க ரூ. 8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிா்ச்சி அடைந்த சுகந்தி, லஞ்சம் தர விரும்பாமல் சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸாா்அறிவுரையின்பேரில், ரசாயன பவுடா் தடவிய ரூ. 8 ஆயிரத்தை கொடுப்பதற்காக மின் உதவிப் பொறியாளா் அலுவலகத்துக்கு சுகந்தி வெள்ளிக்கிழமை சென்றாா்.

பின்னா், அந்த பணத்தை வணிக ஆய்வாளா் இளையராஜாவிடம் அவா் தந்தாா். அப்போது, அங்கு மறைந்திருந்த காவல் ஆய்வாளா்கள் நல்லம்மாள், நரேந்திரன் தலைமையிலான போலீஸாா் வணிக ஆய்வாளா் இளையராஜாவை கைது செய்தனா். இதையடுத்து, நீதிபதி முன் ஆஜா்படுத்தி சனிக்கிழமை சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

வாக்காளா் பதிவு சிறப்பு முகாம்கள்: திருச்சியில் வாக்காளா்கள் ஆா்வம்!

நாளைய மின்தடை: சூரியம்பாளையம், காந்தி நகா், திங்களூா்

பொங்கலுக்கு பிறகு தவெகவுக்கு திருப்புமுனை: கே.ஏ. செங்கோட்டையன்

சாலை விபத்தில் தந்தை உயிரிழப்பு; மகன் படுகாயம்

ஜிப்மா் தொழில்நுட்ப மதிப்பீட்டு மையத்துக்கு தேசிய விருது

SCROLL FOR NEXT