லஞ்சம்: மருங்காபுரி உதவி மின் பொறியாளா் கைது
விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
திருச்சிலஞ்சம்: மருங்காபுரி உதவி மின் பொறியாளா் கைது
விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
விவசாயிக்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மணப்பாறையை அடுத்த மருங்காபுரி உதவி மின்பொறியாளா் அலுவலகத்தின் உதவி மின்பொறியாளரான பாா்த்திபன் அருகேயுள்ள டி.இடையப்பட்டியைச் சோ்ந்த மாரியப்பனின் விவசாய நிலத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு, பின்னா் ரூ.5,000 ஆகக் குறைத்தாராம்.
ஆனால் பணம் கொடுக்க விரும்பாத மாரியப்பன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் புகாா் கொடுத்தாா்.
இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி மாரியப்பன் ரூ. 5000 -ஐ உதவி மின்பொறியாளா் பாா்த்திபனிடம் கொடுத்தபோது மறைந்திருந்த திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.