தம்மம்பட்டி: நாவலூரில் விவசாயத்தோட்டத்திலிருந்த கிணற்றில் தவறி விழுந்த பசுமாட்டை உயிருடன் மீட்கப்பட்டது.
வீரகனூா் அருகே நாவலூா் தெற்கு மூலக்காடு பகுதியில் வசிக்கும் ராமராஜ் என்பவரின் விவசாயத்தோட்டத்தில் திங்கள்கிழமை பிற்பகல் அவரது பசுமாடு , தவறி அங்கிருந்த கிணற்றில் விழுந்து விட்டது. தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத்துறையினா் நிலைய அலுவலா் ஏழுமலை தலைமையில் சென்று பசு மாட்டை உயிருடன் மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனா்.