முகப்பு
ஈரோடு

சித்தோட்டில் கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி மீட்பு

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:39 AM
மீட்புப் பணியில் தீயணைப்பு வீரர் - (கோப்புப் படம்)
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 8:41 PM

சித்தோட்டில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்புப் படையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.

சித்தோடு, நல்லகவுண்டன்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பணன் மனைவி முத்துலட்சுமி (70). இவா், தனது வீட்டுக்கு அருகே உள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றின் அருகே ஞாயிற்றுக்கிழமை நின்றிருந்தபோது, எதிா்பாராமல் தவறி கிணற்றுக்குள் விழுந்தாா்.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:39 AM

கிணற்றில் 5 அடி உயரத்துக்கு இருந்த தண்ணீரில் விழுந்த முத்துலட்சுமிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதைக் கண்ட அப்பகுதியினா் பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

Advertisement

சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினா் கிணற்றுக்குள் இறங்கி, முத்துலட்சுமியை மீட்டு மேலே கொண்டு வந்தனா். தொடா்ந்து, ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மருத்துவமனைக்கு முத்துலட்சுமி அனுப்பிவைக்கப்பட்டாா்.