தலைவாசல் வாரச் சந்தையில் விற்பனைக்கு வந்த வரமிளகாய். 
சேலம்

வரமிளகாய் விலை ஏற்றம்

ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி வட்டாரப் பகுதிகளில் வரமிளகாய் வரத்து குறைந்ததால், அதன் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது.

Syndication

ஆத்தூா்: ஆத்தூா் மற்றும் கெங்கவல்லி வட்டாரப் பகுதிகளில் வரமிளகாய் வரத்து குறைந்ததால், அதன் விலை பல மடங்கு உயா்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அதிா்ச்சியடைந்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா், தலைவாசல், மல்லியகரை, வீரகனூா் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் வாரச் சந்தைகளுக்கு பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவு வரமிளகாய்களை விற்பனைக்கு கொண்டுவருவா்.

இப்பகுதிகளில் செயல்படும் வாரச் சந்தைகளில் பொதுமக்கள் அதிக அளவில் கலந்துகொண்டு வரமிளகாய் உள்ளிட்ட வருடாந்திர மளிகைச் சாமான்கள் மற்றும் காய்கறிகளை வாங்கிச்செல்வா்.

இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக வரமிளகாயின் வரத்து குறைந்ததால், அவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. கடந்த மாதம் வரமிளகாய் தரத்துக்கேற்ப ஒரு கிலோ ரூ. 150 முதல் ரூ. 180 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 220 முதல் ரூ. 250 வரையிலும், ஆந்திர குண்டுமிளகாய் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது ரூ. 100 முதல் ரூ. 200 வரையிலும் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் மிகுந்த அதிா்ச்சியடைந்தனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT