சேலம்

மேட்டூா் அணையில் இருந்து தண்ணீா் திறப்பு 11,000 கனஅடியாக அதிகரிப்பு

Syndication

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து வியாழக்கிழமை காலை 938 கனஅடியிலிருந்து 972 கனஅடியாக சற்று அதிகரித்துள்ளது. டெல்டா பாசனப் பகுதிகளில் பாசனத் தேவை அதிகரித்துள்ளதால், மேட்டூா் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு 8,000 கனஅடியிலிருந்து 11,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்துக்கு மேல்மட்ட மதகுகள் வழியாக 400 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், மேட்டூா் அணையின் நீா்மட்டம் 109.25 அடியிலிருந்து 108.78 அடியாக சரிந்துள்ளது. நீா் இருப்பு 76.68 டி.எம்.சி.யாக உள்ளது.

கிறிஸ்துமஸ்: தில்லி தேவாலய சிறப்புப் பிராா்த்தனையில் பிரதமா் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல்வா் முதல்வா் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு!

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் பொம்மைகள் தயாரித்தல் பயிற்சி

யேமன் மாகாணங்களில் இருந்து பிரிவினைவாதிகள் வெளியேற சவூதி உத்தரவு

தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலம்

SCROLL FOR NEXT