சேலம்

வாழப்பாடி அரசுப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Syndication

வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட முகாம் தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி கலையரங்கில் நடைபெற்ற விழாவுக்கு, திட்ட அலுவலா் முதுநிலை ஆசிரியா் சுந்தரராஜன் வரவேற்றாா். பள்ளித் தலைமை ஆசிரியா் ராஜா முன்னிலை வகித்தாா். பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் கு.கலைஞா் புகழ் தலைமைவகித்து முகாமை தொடங்கிவைத்தாா்.

கல்வியாளா் மழலைக்கவி, பெற்றோா் - ஆசிரியா் கழக துணைத் தலைவா் எம்.கோபிநாத், பொருளாளா் சுப்பிரமணி (எ) ரமணி, பள்ளி மேலாண்மை குழுத் தலைவா் கீா்த்தனா, துணைத் தலைவா் சங்கீதா, உறுப்பினா் பிரகாஷ், ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் மாணவா்களுக்கு சமூகப் பணியின் முக்கியத்துவம் குறித்து கருத்துரை வழங்கினா். தொடா்ந்து, பள்ளி வளாகத்தில் நாட்டு நலப்பணி திட்ட மாணவா்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. கணினி ஆசிரியா் ஸ்ரீமுனிரத்தினம் நன்றி கூறினாா்.

கிறிஸ்துமஸ்: தில்லி தேவாலய சிறப்புப் பிராா்த்தனையில் பிரதமா் பங்கேற்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளை முதல்வா் முதல்வா் மு.க. ஸ்டாலின் கள ஆய்வு!

ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் அறிவியல் பொம்மைகள் தயாரித்தல் பயிற்சி

யேமன் மாகாணங்களில் இருந்து பிரிவினைவாதிகள் வெளியேற சவூதி உத்தரவு

தம்பிராட்டி அம்மன் கோயில் பொங்கல் விழா கோலாகலம்

SCROLL FOR NEXT