முகப்பு
கோப்புப்படம்.
கள்ளக்குறிச்சி

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் பணியிடை நீக்கம்

அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.

Updated On : 4 மார்ச், 2026 at 6:33 PM
கோப்புப்படம்.
பகிர்:

கள்ளக்குறிச்சி, மாவட்டம், அரசு ஆதிதிராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின்பேரில் ஆசிரியரை மாவட்ட ஆட்சியா் பணியிடைநீக்கம் செய்தாா்.

தியாகதுருகம் காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (53). இவா் தியாகதுருகம் அருகிலுள்ள ஒரு அரசு ஆதி திராவிடா் நல உயா்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். ஆசிரியா் பாபு பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் தாமரை மணாளன் அளித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, விசாரணை செய்து வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிந்துரையின்படி, ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் ஆசிரியா் பாபுவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →