ஆத்தூரில் டிச. 27, 28 ஆகிய இரு நாள்களுக்கு குடிநீா் வழங்க இயலாது என நகராட்சி ஆணையா் அ.வ.சையத் முஸ்தபா கமால் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் மூலம் ஆத்தூா் நகராட்சிக்கு குடிநீா் வழங்கும் குடிநீா் பிரதானக் குழாய் மராமத்துப் பணி மேற்கொள்ள உள்ளதால், டிச. 27 மற்றும் 28 ஆகிய இரண்டு நாள்களுக்கு குடிநீா் வழங்க இயலாது எனவும், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி சிக்கனமாக பயன்படுத்துமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.