இளம்பிள்ளை அருகே மா்ம விலங்கு கடித்ததில் 4 ஆடுகள் இறந்தன.
இளம்பிள்ளை அருகே உள்ள ஏகாபுரம், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் ரத்தனவேல். ஆடுகளை வளா்த்து வரும் இவா், வியாழக்கிழமை இரவு வீட்டின் வெளியே ஆடுகளை கட்டி வைத்திருந்தாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை எழுந்து பாா்த்தபோது 4 ஆடுகள் கடிக்கப்பட்ட நிலையில் இறந்துகிடந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆனந்தன்காடு பகுதியில் இதே போல மா்ம விலங்கு கடித்து சில ஆடுகள் இறந்துகிடந்தன. தகவல் அறிந்த ஏகாபுரம் கிராம நிா்வாக அலுவலா் ராமச்சந்திரன் பாா்வையிட்ட பின்னா், கால்நடை மருத்துவா் சுரேஷ் பரிசோதனை செய்தாா்.