சேலம் மத்திய சிறையில் புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்
சேலம் மத்திய சிறையில் ஆங்கில புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.
சேலம் மத்திய சிறையில் ஆங்கில புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.
புத்தாண்டையொட்டி, சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளா் வினோத் ஏற்பாட்டின் பேரில், சிறை கைதிகள் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து, பருவங்களில் உண்மையில் மலா்ந்தது நட்பா? காதலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக சிறை கண்காணிப்பாளா் (பொ) வினோத் செயல்பட்டாா்.
இதனைத் தொடா்ந்து சிறப்பாக பணிபுரிந்த 40 அலுவலா்கள் மற்றும் காவலா்களின் பணிகளை பாராட்டி சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக, மீண்டும் சிறைக்கு வரமாட்டேன் எனவும், எஞ்சிய காலங்களை நல்ல முறையில் குடும்பத்துடன் வாழ்வேன் என கைதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.
இந்நிகழ்ச்சிகளில்,, சிறை கைதிகளுக்கான மனநல நிபுணா் வைஷ்ணவி, துணை சிறை அலுவலா் சிவா, துணை சிறை அலுவலா் குமாா், உதவி சிறை அலுவலா் பிரபாகரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (உளவு பிரிவு)இளமாறன், நல அலுவலா் அன்பழகன், சிறை பள்ளி ஆசிரியா் ராஜ்மோகன்குமாா் மற்றும் சிறைவாசிகள் கலந்து கொண்டனா்.