முகப்பு
சேலம்

நீா்நிலைகளில் கழிவுநீா் வெளியேற்றம்: 36 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிப்பு

சேலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை வெளியேற்றிய 36 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

Updated On : 1 ஜனவரி, 2025 at 9:57 PM
பகிர்:

சேலம் திருமணிமுத்தாற்றில் கழிவுநீரை வெளியேற்றிய 36 சாயப்பட்டறைகளின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

சேலம், ஏற்காடு மலைப் பகுதியில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம், நாமக்கல் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடி காவிரியில் கலக்கிறது. சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் திருமணிமுத்தாறு மாசு அடைந்துவிட்டதாக பசுமை தீா்ப்பாயத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இதை விசாரித்த பசுமை தீா்ப்பாய நீதிபதிகள், திருமணிமுத்தாற்றில் கழிவுநீா் கலக்க காரணமானவா்களுக்கு அபராதம் விதிக்க கடந்த 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

அதைத் தொடா்ந்து, திருமணிமுத்தாற்றில் கழிவுநீா் கலப்பதை தடுக்கும் வகையில் பொதுப்பணித் துறை, சுற்றுச்சூழல் துறை, நிதித் துறை, உள்ளாட்சித் துறையை சோ்ந்த அதிகாரிகள் தலைமையில் குழுக்கள் அமைத்து திருமணிமுத்தாற்றை கண்காணிக்கவும் பசுமை தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

இதையடுத்து, சேலம் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், திருமணிமுத்தாற்றில் கழிவுநீரைத் திறந்துவிடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்தும், மின் இணைப்புகளை துண்டித்தும் வருகின்றனா். கடந்த ஆண்டில் மட்டும் 36 சாயப்பட்டறையின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மேலும், 17 பட்டறைகள் இடித்து அகற்றப்பட்டன. 20 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறை, சேகோ ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →