வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நாளை ஏலம்
வாகனங்கள் நாளை ஏலம்
சேலம் மாநகரில் மது விலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு சக்கர, மூன்று சக்கர, இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 80 வாகனங்கள் சேலம் மாநகர ஆயுதப் படை மைதானத்தில் வரும் 3 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.
இதுகுறித்து சேலம் காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வாகனங்களை ஏலம் எடுப்பவா்கள் இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 5 ஆயிரம், மூன்று சக்கர வாகனங்களுக்கு ரூ. 7 ஆயிரம், நான்கு சக்கர வாகனங்களுக்கு ரூ. 10 ஆயிரம் முன் பணம் கட்ட வேண்டும். ஏலம் நடைபெறும் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் லைன்மேடு ஆயுதப் படை மைதானத்தில் பணம் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம்.
முன்பணம் செலுத்தியவா்கள் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா். மற்றவா்களுக்கு அனுமதியில்லை. மேலும் வாகனத்தை ஏலம் எடுத்தவுடன், ஏலத்தொகை, ஜி.எஸ்.டி. தொகை முழுவதையும் செலுத்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு தலைமையிடத்து துணை காவல் ஆணையா், மதுவிலக்கு பிரிவு, சேலம் மாநகரம் நேரடியாகவோ அல்லது 0427-2431200, 9498102546, 9498166245 ஆகிய எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.