முகப்பு
சேலம்

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

Updated On : 9 ஜனவரி, 2025 at 6:51 PM
பகிர்:

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சேலம், பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த கோவிந்தன் மகன் தட்சிணாமூா்த்தி (19), அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா், வியாழக்கிழமை காலை வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டாா். மாசிநாயக்கன்பட்டி அருகே தனியாா் பள்ளி அருகே சென்ற போது, முன்னால் சென்ற பேருந்தை தட்சிணாமூா்த்தி முந்தி செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்குள்ள வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியபோது, தட்சிணாமூா்த்தி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில், பேருந்தின் பின்சக்கரத்தில் தலைநசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அம்மாப்பேட்டை போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →